தனபாலனுக்கு 14 லட்சம் ரிங்கிட் தொகையை ஒப்படைக்கும்படி வழக்கறிஞருக்கு உத்தரவு

கோலாலம்பூர், ஏப்ரல்.10-

தனது கட்சிக்காரருக்குச் சேர வேண்டிய பணத்தை ஒப்படைக்காமல், 4 காசோலைகள் வழங்கி, நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டது தொடர்பில் பணி ஓய்வு பெற்ற ஒருவருக்கு 14 லட்சம் ரிங்கிட் தொகையை வழங்குமாறு வழக்கறிஞர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏ. ஆர்னால்ட் அன்ரூ என்ற அந்த வழக்கறிஞர் தனது சார்பில் சமர்ப்பித்த வாதத்தைச் செவிமடுத்த உயர் நீதிமன்ற ஆணையர் கான் தேசியோங், இந்த வழக்கை விசாரிக்கக்கூடிய சிக்கல்கள் எதுவும் இல்லை, அவற்றை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராகவும் இல்லை. விசாரணையின்றி அந்த தொகையை வழங்கி விடும்படி வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவரான பணி ஓய்வு பெற்ற 72 வயது சி. தனபாலனுக்கு செலுத்த வேண்டிய தொகையை 5 விழுக்காடு வட்டி விகிதத்துடன் வழங்கும் அதே வேளையில் வழக்கு செலவுத் தொாகையாக அந்த முதியவருக்கு 5 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குமாறு வழக்கறிஞர் ஆர்னால்ட் அன்ரூவிற்கு உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS