11 வயது சிறுவனைக் கைது செய்ய முடியுமா?

கோத்தா பாரு, ஏப்ரல்.10-

கிளந்தானில் தகாத உறவின் வழி தனது 15 வயது உறவுக்காரப் பெண்ணைக் கர்ப்பிணியாக்கியிருக்கும் 11 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்து இருப்பது குறித்து இரு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

13 வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள், தகாத உறவு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களைக் கைது செய்ய முடியாது, காவலில் தடுத்து வைக்கக்கூடாது என்று சட்டங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் வி. விமல் அரசன் மற்றும் ஷாம்ஷேர் சிங் தின் ஆகியோர் தெரிவித்தனர்.

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த 11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசோப் மாமாட் தெரிவித்து இருப்பது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் அந்த இரு வழக்கறிஞர்கள் தங்களின் ஐயப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.

13 வயதுக்கு கீழ் பட்ட சிறார்களைக் கைது செய்யக்கூடாது என்று 1950 ஆம் ஆண்டு சாட்சியங்கள் சட்டம் 113 ஆவது விதி வலியுறுத்துவதாக அவர்கள் வாதிட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS