ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.10-
கடந்த செவ்வாய்க்கிழமை, பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் பாதுகாவலர் சாவடியில் போலீஸ்காரர் ஒருவர் சொந்தமாகச் சுட்டுக் கொண்டு, காயமுற்ற சம்பவம் தொடர்பில் அவரின் முன்னாள் மனைவியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கானக் காரணங்களைக் கண்டறிவதற்கு விசாரணைக்கு உதவும் வகையில் வெகுவிரைவில் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
58 வயதுடைய அந்த போலீஸ்காரர், இன்னமும் தீவிர கண்காணிப்புப் பிரிவு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.