தாப்பா, ஏப்ரல்.10-
பேரா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
தாப்பா, டேவான் மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏற்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் செயலாளர் டத்தோ இக்மாய்ருடின் இஷாக் தெரிவித்தார்.
வேட்புமனுத் தாக்கல் மையத்தில் எஸ்பிஆர் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கலை ஒப்படைப்பதற்கான நேரம் காலை 9 முதல் 10 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்ட விதிகளை பின்பற்றுமாறு டத்தோ இக்மாய்ருடின் இஷாக் கேட்டுக் கொண்டுள்ளார்.