கடும் மழையில் நிலச்சரிவு: வீடு ஒன்று கடும் பாதிப்பு

கோம்பாக், ஏப்ரல்.11-

அடை மழையின் காரணமாக சிலாங்கூர், கோம்பாக், 12 ஆவது மைல், கம்போங் ஓராங் அஸ்லி பூர்வகுடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் ஒரு வீடு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்தது. இது குறித்து காலை 5.05 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகமட் ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

செலாயாங்கிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் பழைய கோலாலம்பூர் – பெந்தோங் சாலையில் உள்ள அந்த பூர்வகுடி கிராமத்திற்கு விரைந்த தீயணைப்பு , மீட்புப்படை வீரர்கள் 40 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடு சரிந்திருப்பதைக் கண்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் யாரும் சிக்கவில்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS