அடை மழையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

விடிய விடிய கொட்டித் தீர்த்த கடும், அடை மழையில் சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

காஜாங், ஷா ஆலாம், காஜாங் முதலிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைப் புரண்டோடின. இதனால், வாகனமோட்டிகள் உட்பட குடியிருப்பாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஜாங்கில் கம்போங் சுங்கை மேரா லுவார், கிள்ளானில் தாமான் ஶ்ரீ ஜெயா முதலிய பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

வீடுகளில் வெள்ளம் புகுந்து விட்டதாக அதிகாலை 3 மணி முதல் தாங்கள் அவசர அழைப்பு பெற்றதாகவும் சம்பந்தபட்ட பகுதிகளில் வெள்ள நீர் 1.2 மீட்டர் உயரம் வரை கரைபுரண்டோடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS