13 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம்

அம்பாங், ஏப்ரல்.11-

அம்பாங்கில் உள்ள ஒரு தனியார் சமயப்பள்ளி மையத்தில் பயிலும் 13 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததுடன், அவரை ஆபாச சேட்டையில் ஈடுபடுத்தியதாக அந்த சமயப்பள்ளி பணியாளரின் மகன், அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

18 வயதுடைய அந்த இளைஞர், மாஜிஸ்திரேட் நோர்மாய்ஸான் ரஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, 2017 ஆம் ஆண்டு சிறார் ஆபாச குற்றவில் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள அந்த சமயப் பள்ளியின் கழிப்பறையில், அப்பள்ளியின் மாணவனான அந்த இளைஞர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றம் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS