சென்ட் அந்தோணி இடைநிலைப் பள்ளிக்கு ங்கா மற்றும் வூ கா லியோங் இணைந்து 30 ஆயிரம் ரிங்கிட் மானியம்

தெலுக் இந்தான், ஏப்ரல்.11-

தெலுக் இந்தான் வட்டாரத்தில் பழமை வாய்ந்த சென்ட் அந்தோணி இடைநிலைப் பள்ளிக்கு தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங்கும் கூட்டாக இணைந்து 30 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை வழங்கினர்.

அந்த பழமை வாய்ந்த இடைநிலைப் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரான ங்கா கோர் மிங்கும், ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவருமான வூ கா லியோங்கும் இந்த நிதி உதவியை வழங்கினர்.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் ஜெலாஜா செகொலா திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்வது மட்டுமின்றி அனைத்து மாணவர்களும் செளகரியமான, பாதுகாப்பான மற்றும் உகந்த சுற்றுச் சூழலில் கற்றலை மேற்கொள்வதை உறுதிச் செய்வதற்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங்கும் வூ கா லியோங்கும் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS