நடிகை தபு விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்தார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்திய அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தனித்துவமான கதைத் தேர்வுகளுக்குப் பெயர் பெற்ற தபு, இந்த படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இந்த படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார்.

“மாச்சிஸ்” (1996) மற்றும் “சாந்தினி பார்” (2001) ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தபு வென்றது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS