உலு திரங்கானு, ஏப்ரல்.11-
கிழக்கு கரை நெடுஞ்சாலையான LPT 2 இல் 379.4 ஆவது கிலோ மீட்டரில் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
கோலத் திரங்கானு, டுங்குன், புக்கிட் பீசி அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஹோண்டா சிட்டி வாகனம், சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.
இதில் தனியொரு நபராக வாகனத்தைச் செலுத்திய 57 வயதுடைய அந்த நபர், கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.