ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.11-
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சொந்தமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, கடும் காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
58 வயதுடைய அந்த போலீஸ்காரர் நேற்று மாலை 5.12 மணியளவில் மரணமுற்றதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.
பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில் பாதுகாவலர் சாவடியில் பணியாற்றி வந்த அந்த போலீஸ்காரர், தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு, மிக ஆபத்தான நிலையில் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தன் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.