ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-
ஜோகூர், ஜாலான் பெஸ்தாரி- ஜாலான் சுங்கை திராம் – உலு திராம் சாலை சந்திப்பில் இன்று மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாயும், ஒரு வயது குழந்தையும் மரணமுற்றனர். மேலும் ஒரு முதியவர் உட்பட மூவர் கடும் காயங்களுக்கு ஆளானார்கள்.
இந்த விபத்தில் பெரோடூவா மைவி காரில் பயணம் செய்த 58 வயது மாது சம்பவ இடத்திலேயே மரணமுற்ற வேளையில் அவரின் ஒரு வயது குழந்தை மருத்துவனைமனயில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. முகமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.