பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு கெளரவ முனைவர் பட்டம்

கோம்பாக், ஏப்ரல்.11-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சட்டத்துறையில் இன்று கெளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, Shenandoah பல்கலைக்கழகம் இந்த உயரிய பட்டத்தை வழங்கியுள்ளது.

சிலாங்கூர், கோம்பாக்கில் உள்ள மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக கலாச்சார நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் Shenandoah பல்கலைக்கழகத்தின் தலைவர் Dr Tracy Fitzsimmons, பிரதமருக்கு இந்த கெளரவப் பட்டத்தை வழங்கினார்.

தலைமைத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு டத்தோஸ்ரீ அன்வார் ஆற்றிய பங்களிப்புக்காக சட்டத்துறையில் இந்த முனைவர் பட்டத்தை அந்தப் பல்கலைக்கழகம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்த விருதளிப்பு விழாவில் ஏற்புரை நிகழ்த்திய டத்தோஸ்ரீ அன்வார், நாட்டின் பிரதமர் என்பதற்காக இந்த பட்டத்தைத் தாம் பெறவில்லை என்றும், தாம் பிரதமராக வருவதற்கு முன்பே Shenandoah பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு விட்டது என்றும் குறிப்பிட்டார்.

எனினும் மனித சுதந்திரம், மனித உரிமை, கண்ணியத்தை ஏற்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக தாங்கள் இணைந்து வழங்கிய பணிக்காக இந்த பட்டம் வழங்கப்படுகிறது என்றார்.

டத்தோஸ்ரீ அன்வார், பிரதமராக வருவதற்கு முன்பு, சட்டத்துறை தொடர்பில் மனித உரிமை குறித்து பல்வேறு பல்கலைக்கழங்களில் விரிவுரை வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS