தாப்பா, ஏப்ரல்.11-
பேரா, தாப்பா, நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல், நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
தாப்பா, டேவான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு பணிகளை உறுதிச் செய்வதற்கு ஆயிரத்து 114 போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நொர்டின் தெரிவித்தார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள், தேர்தல் ஆணையத்தின் நடப்பு விதிமுறைகளை அனுசரிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
வேட்புமனுத் தாக்கல் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுவதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.