ஷா ஆலாம், ஏப்ரல்.11-
மோசமான வெள்ளம் காரணமாக ஷா ஆலாம், செக்ஷன் 27 , தாமான் ஆலாம் இண்டாவில் கட்டுமானப் பொருள்கள் வைத்திருக்கும் கிடங்கில் நீரில் மின்சாரம் பாய்ந்து இலங்கைப் பிரஜை ஒருவர், தனது வளர்ப்பு நாயுடன் இறந்து கிடந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
சம்பந்தப்பட்ட இலங்கைப் பிரஜையும், நாயும், நீரில் இறந்து கிடந்ததைக் கண்டு காலை 10.51 மணியளவில் பொது மக்கள் தகவல் அளித்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
மின்சாரம் நீரோடு நீராக கலந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 27 வயதுடைய அந்த இலங்கைப் பிரஜையின் உடலில் எவ்வித காயமும் இல்லை. அந்த நபர் இறந்த கிடந்த அருகாமையிலேயே நாயும் இறந்து கிடந்ததாக இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.