குவா மூசாங்,
டிரெய்லர் லோரியுடன் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இத்துயரச் சம்பவம், இன்று காலை 8.15 மணியளவில் கோத்தா பாரு, குவா மூசாங் – கோல கெராய் சாலையின் 37 ஆவது கிலோ மிட்டரில் நிகழ்ந்தது.
இதில் 38 வயது ஆடவர், கடும் காயங்களுக்கு ஆளாகி, மரணமுற்றதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் பூஃ தெரிவித்தார்.
கோல கெராயிலிருந்து குவா மூசாங்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கொண்டிருந்த அந்த இளைஞர், எதிர்பாராத விதமாக எதிர்த்திசையில் டிரெய்லர் லோரி வந்து கொண்டிருந்த வழித் தடத்தில் நுழைந்து விட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.