குளுவாங், ஏப்ரல்.12-
ஜோகூர், குளுவாங், ஜாலான் மெங்கிபோலில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டு, காயம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர் தாக்கப்படும் காட்சியைக் கொண்ட காளொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நேற்று மாலை 4.00 மணியளவில் குளுவாங், ஜாலான் செகோலாவில் 29 மற்றும் 45 வயதுடைய இரு நபர்களைப் போலீசார் கைது செய்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவனுக்கு ஏற்கனவே குற்றப்பதிவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.