விஜய் சேதுபதி – சசிகுமார் இணைந்து நடிக்கும் புதிய படம்

இயக்குநர் துரை செந்தில்குமார் கருடன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தி லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் லெஜெண்ட் சரவணன் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில்குமார் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணியில் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு டூவல் ஹீரோ கதையாக உருவாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ஏஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. சசிக்குமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

WATCH OUR LATEST NEWS