26 வருடங்களுக்கு பின் மீண்டும் படையப்பாவுடன்… ரம்யா கிருஷ்ணன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கும் மனைவியாக நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராமிக் பகிர்ந்துள்ளார். அதில், “படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும், ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 

  

WATCH OUR LATEST NEWS