ஜெர்மனி, ஏப்ரல்.12-
லிவர்பூல் கோல் மன்னன் முகமட் சாலா அவ்வணியில் மேலும் ஈராண்டுகளுக்கு நீடிக்க வகை செய்யும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன் வாயிலாக பல மாதங்களாக நீடித்து வந்த பல்வேறு ஆருடங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சாலா 2017 ஆம் ஆண்டு முதல் லிவர்பூலில் விளையாடி வருகிறார். 32 வயதான அவர் 394 ஆட்டங்களில் 243 கோல்களைப் புகுத்தியிருக்கிறார். அதன் மூலம் லிவர்பூல் அணிக்காக அதிக கோல் அடித்த மூன்றாவது விளையாட்டாளர் என்ற பெருமையையும் அவர் வைத்துள்ளார்.
இப்பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்திற்குக் குறி வைத்துள்ள லிவர்பூல் அணிக்கு சாலா முக்கியத் தூணாக விளங்குகிறார்.