பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினி, ஏப்ரல்.12-

பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பப்புவா நியூ கினி தீவானது, தீவிர நில அதிர்வு மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்படும் நிலநடுக்கம் அவ்வப்போது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் பப்புவா நியூ கினியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியிருந்தது. கோகோபோ என்ற பகுதியின் தென்கிழக்கே 115 கி.மீ., தொலைவிலும், 72 கி.மீ., ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. நிலநடுக்கத்தின் போது ஏதேனும் பாதிப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அண்மையில் மியான்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS