டெல்லி, ஏப்ரல்.12-
வெள்ளிக்கிழமை மாலை இந்திய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் தாமதமாகின.
டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் சீராகி வருகின்றன. இருப்பினும், நேற்றிரவு வானிலை காரணமாக சில விமானங்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன என டெல்லி அனைத்துலக விமான நிலைய லிமிடெட் தெரிவித்துள்ளது.நேற்று நாடு முழுவதும் விமான நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட்டதாக அது கூறியது. விமானத் தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்டவை குறித்து விரக்தியடைந்த பயணிகள் புகார் அளித்தனர்.
350 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி, பயணிகள் பகுதியில் குழப்பமான காட்சிகள் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தொடர்ந்து நிலவும் விமானப் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகியவற்றுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நெட்வொர்க் முழுவதும் சில விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இண்டிகோ விமான நிறுவனம் இன்று பிற்பகல் X பதிவில் தெரிவித்தது.