179 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல்.12-

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்துச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 179 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இந்த வெடி விபத்துக்கான புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அதிகமானோரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணிக்கையில் 138 பேர் பாதிக்கப்பட்ட மக்கள் ஆவர். எஞ்சியவர்கள், பெட்ரோனாஸ் அதிகாரிகள், குத்தகையாளர்கள்,மேம்பாட்டாளர்கள், சுபாங் ஜெயா மாநகர் மன்ற அதிகாரிகள் மற்றும் இதர துறையைச் சேர்ந்தவர்கள் என்று டத்தோ ஹுசேன் ஒமார் விளக்கம் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS