ஈஆர்எல் ரயில் கேபள்கள் வெட்டப்பட்டது, மூவர் கைது

கோலாலம்பூர், ஏப்ரல்.12-

கோலாலம்பூர் சென்ரல் ரயில் நிலையத்தையும், சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தையும் இணைக்கும் ஈஆர்எல் விரைவு ரயில் போக்குவரத்து சேவை நிலைக் குத்தும் அளவிற்கு அதன் மின்சார கேபள்கள் திருட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்துள்ளனர்.

அந்த மூன்று நபர்களும் இன்று சனிக்கிழமை காலை 5 மணி முதல் 8 மணி வரை பண்டார் பாரு சாலாக் திங்கி மற்றும் டெங்கில் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

25 க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS