கோலாலம்பூர், ஏப்ரல்.12-
மலேசியாவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங், வருகையை முன்னிட்டு அரச மலேசிய போலீஸ் படை பாதுகாப்பை வலுப்படுத்தவிருக்கிறது.
சீன அதிபர் மலேசியாவிற்கு வருவதற்கு முன்னதாக ஆகாய மார்க்கவும், தரை மார்க்கவும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஸாருடின் ஹசேன் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 17 ஆம் தேதி வியாழக்கிழமை வரை அதிபர் ஸி ஜின்பிங்கின் அதிகாரத்துவப் பயணம் அமைந்து இருக்கும்.
சீன அதிபரின் வருகைக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.