பட்டர்வொர்த், ஏப்ரல்.12-
தனது நாட்டிற்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கை தொடர்பில் அவ்விவகாரத்தை கையாளுவதில் மலேசியா தன்னிச்சையாகச் செயல்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த வரி விவகாரம் மலேசியாவை மட்டும் சம்பந்தப்படுத்தியிருக்கவில்லை. இதில் உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள இந்த சவாலை எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் ஆசியான் உணர்வுடன் மலேசியா இந்த விவகாரத்தை கையாளும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.