அந்தக் கொலையாளி தாயகம் கடத்தப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.12-

கடந்த 2018 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் பிரபல வர்த்தகர் ஒருவர் படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த கொலையாளி ஒருவர், பெட்டாலிங் ஜெயாவில் பிடிபட்ட நிலையில், அவர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணியளவில் பிலிப்பைன்ஸிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மணிலா செல்லும் விமானத்தில் அனுப்பப்பட்ட 51 வயதுடைய Alan Dennis Lim Sytin என்ற அந்த கொலையாளி, பிலிப்பைன்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தனது சொந்தச் சகோதரரையே கொலை செய்த அந்த நபர், மலேசியாவில் பதுங்கியிருந்த நிலையில் கடந்த மாதம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இரவு நேர கேளிக்கை மையத்தில் மலேசியா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS