ஜோகூர் பாரு, ஏப்ரல்.12-
பள்ளியில் பயின்ற சக மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களைச் சேகரித்து, அவர்களின் முகத் தோற்றத்தை பயன்படுத்தி, AI தொழில்நுட்பத்தின் வாயிலாக ஆபாசப்படங்களைத் தயாரித்து சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்து வந்த 16 வயது மாணவனுக்கு எதிரான தடுப்புக் காவலை, போலீசார் வரும் செவ்வாய்க்கிழமை வரை நீட்டித்துள்ளனர்.
ஜோகூர் கூலாயைச் சேர்ந்த அந்த மாணவனின் இத்தகைய வக்கிரச் செயலினால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
அந்த மாணவனுக்குப் பெறப்பட்ட தடுப்புக் காவல் காலக்கெடு, இன்று சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் அந்த காலக்கெடு, மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.