மியன்மாரின் மருத்துவமனைத் தளத்தை உருவாக்க மலேசியா கொள்கை அளவில் ஒப்புதல்

ரெம்பாவ், ஏப்ரல்.12-

கடந்த மார்ச் 28 ஆம் தேதி மியன்மாரில் நிகழ்ந்த நில வரலாறு காணாத நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அந்த நாட்டில் ஒரு தற்காலிக மருத்துவமனையை நிறுவுவதற்கு மலேசியா கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

இதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியா முன்னெடுத்துள்ள மனிதாபிமான உதவிக் குழுவிற்குத் தலைமையேற்றுள்ள முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

இந்த பேரிடரில் மியன்மார் நாட்டில் 84 மருத்துவமனைகள் சரிந்து விழுந்தன. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை போன்ற முதன்மையான சிகிச்சைகளைச் செய்வதற்கு மருத்துமனைகள் தேவைப்படுவதாக முகமட் ஹசான் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS