அமிருடின், ரபிஃசி, அல்திமெட் வெற்றி

கோம்பாக், ஏப்ரல்.13-

நேற்று நடந்த பிகேஆர் கட்சியின் கோம்பாக் தொகுதி நிலையிலான தேர்தலில் சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரி போட்டியின்றி வெற்றி பெற்றார். எனினும், அவரது அரசியல் செயலாளர் ரஹிம் அஹ்மாட் கஸ்டி துணைத் தலைவர் பதவியில் 36 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ரபிஃசி ரம்லி, பண்டான் தொகுதித் தலைவர் பதவியைத் தக்கவைத்தார். அம்பாங்கில் அல்திமெட் என்றழைக்கப்படும் சையிட் அஹ்மாட் அப்துல் ரஹ்மான் அல்ஹாடாட் வெற்றி பெற்றார்.

காப்பாரில் அப்துல்லா சானி அப்துல் ஹாமிட்டும், கோலா சிலாங்கூரில் எஸ். தீபனும் தலைவர் பதவியை இழந்தனர். கோத்தா ராஜாவில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரான ஜி. குணராஜா வெற்றி பெற்றார். பெட்டாலிங் ஜெயா தொகுதித் தலைவராக அதன் நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியான் சுங் வெற்றி பெற்றார்.

WATCH OUR LATEST NEWS