கோலாலம்பூர், ஏப்ரல்.13-
தலைநகரில் உரிமம் இல்லாமல் ஜாலான் லெபோ புடு, ஜாலான் துன் தான் சியூ சின் மட்டும் இல்லாமல் பெட்டாலிங் சுற்றுப்புறங்களில் வியாபாரம் செய்யும் வெளிநாட்டுவாசிகளுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகர் மன்றம் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பான வணிக நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.
டிபிகேஎல் அமலாக்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, 2016 ஆம் ஆண்டுக்கான வியாபாரிகள் உரிமம் துணைச் சட்டத்தை மீறும் வணிகர்களை இலக்காகக் கொண்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக, உரிமம் இல்லாமல் வணிகம் செய்த வெளிநாட்டு வணிகர்களுக்கு எதிராக 7 பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கோலாலம்பூர்,தாமான் மிஹார்ஜா செரால், ஜாலான் லொம்போங்கில் உள்ள பறிமுதல் கிடங்கிற்குல் கொண்டுச் செல்லப்பட்டன என்று டிபிகேஎல் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட முக்கிய இடங்களில் இதுபோன்ற அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் டிபிகேஎல் வலியுறுத்தியுள்ளது.