சமூக ஊடகத் தளங்களில் கருத்து தெரிவிப்பதில் கவனம் வேண்டும்

தாப்பா, ஏப்ரல்.13-

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரையின் போது, சமூக ஊடக தளங்களில் கருத்து தெரிவிக்கும் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, 3R எனப்படும் மதம், இனம், முடியாட்சி தொடர்பாக உணர்ச்சிகரமான கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு செய்பவர்கள் கண்டறியப்பட்டால், குற்றவியல் தண்டனையாக 5 இலட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் எச்சரித்துள்ளார். இதுவரை இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை என்றாலும், தேர்தல் பரப்புரை தீவிரமடையும் போது இது நிகழ வாய்ப்புள்ளது. 3R பிரச்சினைகளை யார் எழுப்பினாலும், சட்டமீறல் நடந்ததாக அதிகாரிகள் நம்பினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பரப்புரை செய்ய விரும்புபவர்கள் 3R பிரச்சினைகளைத் தவிர்க்கவும், ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை பதிவேற்றவோ (மீள்பதிவு) செய்யவோ வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் காலத்தில் அரசாங்கத் திட்டங்களை அறிவிப்பதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நியாயமான போட்டி நிலவ வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS