17 சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.13-

சீன அதிபர் ஸி ஜின்பிங் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வதையொட்டி, அடுத்த செவ்வாய் முதல் வியாழன் வரை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 17 சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறுகையில், பிரதிநிதிகள் செல்வதற்கு வழிவிடும் வகையில் சாலைகள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மூடப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்கப்படும். இந்த காலகட்டத்தில் முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், சாலை விதிகளை அமல்படுத்தவும் 378 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

ஏப்ரல் 15 முதல் 17 வரை குறிப்பிட்ட நேரங்களில் கேஎல்ஐஏ, எலிட், புத்ராஜெயா, மெக்ஸ், கெசாஸ், என்பிஈ உள்ளிட்ட முக்கியச் சாலைகள் மூடப்படும். எனவே, சாலைப் பயனர்கள் முழுமையான சாலை மூடல்களையும், திருப்பி விடப்படும் பாதைகளைத் தவிர்க்கவும், தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் ஜேஎஸ்பிடி கேட்டுக் கொள்கிறது.

WATCH OUR LATEST NEWS