வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட படத்தை இயக்கவிருக்கும் பா.இரஞ்சித்

சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார். அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.

இந்நிலையில், அடுத்து இரஞ்சித் இயக்கப்போகும் படம் குறித்து அண்மைய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பயோபிக் படமொன்றை இயக்க இரஞ்சித் தயாராகி வருகிறாராம். அதுவும் இந்திய கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பலூ என்பவரின் வாழ்க்கையைப் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். அது குறித்து பா.இரஞ்சித்தே நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளாராம்.  

WATCH OUR LATEST NEWS