லாஹாட் டாத்து, ஏப்ரல்.13-
அரசாங்கம் ஒருபோதும் எந்தவொரு தனிநபருக்கும் எளிதாக குடியுரிமையை வழங்காது. மாறாக, அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தகுதியான தனிநபருக்கு உரிய ஆவணங்களை வழங்குவதற்கு முன் குடியுரிமை விசாரணையும் ஆய்வும் தேவைப்படுகிறது என்றார் உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா.
இதற்கிடையில், தேசிய பதிவுத் துறை செயல்படுத்தும் மெக்கார் திட்டம், கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு பதிவு முறையை எளிதாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகும். அடையாள ஆவணங்களை உருவாக்குதல், பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்தல் போன்ற விவகாரங்களுக்கும் ஜேபிஎன் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. ஜேபிஎன் அதிகாரிகள் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது உட்பட ஆலோசனைச் சேவைகளை வழங்குவதற்காகத் தேவையான வசதிகளுடன் கிராமப்புறங்களுக்குச் செல்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.