சிப்பாங், ஏப்ரல்.13-
நேற்று மாலை பண்டார் செரெனியா டோல் சாவடியிலிருந்து சைபர்ஜெயா நோக்கிச் செல்லும் சாலையில் பிரேக் செயலிழந்ததாக நம்பப்படும் லாரி ஒன்று மோதியதில் 15 வாகனங்கள் சேதமடைந்தன. மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், நீலாயில் இருந்து வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் வரிசையாக நின்றிருந்த வாகனங்களின் மீது மோதியது.
சிப்பாங் மாவட்டக் காவல் துறையின் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜி கே ஷான் கோபால் கூறுகையில், அனைத்து வாகனங்களும் அந்த நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற வரிசையில் காத்திருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது என்றார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.