கோலாலம்பூர், ஏப்ரல்.13-
இந்துக்கள் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டு , சீக்கியர்கள் கொண்டாடும் வைசாக்கி , மலையாள வம்சாவளியினர் கொண்டாடும் விஷு அசாம்ஷங்கள் என அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ மு. சரவணன்.
இந்துக்களின் மரபு தொட்ட பெருமைகளைத் தாங்கி வரும் சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும். வசந்த காலத்தின் வண்ணமயமான தென்றலோடு மலர்ந்து வரும் விஷு பண்டிகை, மலையாளிகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருநாளாகத் திகழ்கிறது. சீக்கிய சமுதாயத்தினருக்கு வைசாக்கி என்பது புத்தாண்டின் ஆரம்பத்தைக் குறிக்கும் ஒரு மகத்தான நாளாக அமைகிறது. இது விவசாய அறுவடைக் காலத்தையும் குறிக்கிறது.
இந்திய வம்சாவளியினரின் இந்த புத்தாண்டுகள் அனைத்தும் அனைவருக்கும் நல்லதைத் தரும் ஒரு பொன்னான ஆண்டாக மலர வேண்டும். புதிய நம்பிக்கைகளை விதைத்து, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும், மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நிரம்பி இருக்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒற்றுமை, சமூகத்தில் அன்பும் அமைதியும் நிரம்பி வாழ வேண்டும் எனவும் தமது வாழ்த்துச் செய்தியில் சரவணன் குறிப்பிட்டார்.