221 மாற்று ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன

சுபாம் ஜெயா, ஏப்ரல்.13-

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, சாலை போக்குவரத்து துறை – ஜேபிஜே நடமாடும் சேவை மையம் மூலம் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்கள், சாலை வரி ஆவணங்கள் என மொத்தம் 221 மாற்று ஆவணங்களை வழங்கியுள்ளது. ஏப்ரல் 3 முதல் 6 வரை புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக தங்குமிட மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜேபிஜே சேவை மையத்தில் இந்த பதிவு மேற்கொள்ளப்பட்ட தாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பாஃட்லி ரம்லி தெரிவித்தார்.

ஏப்ரல் 1-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த அல்லது காணாமல் போன வாகன மானியங்கள், ஓட்டுநர் உரிமங்களுக்கான மாற்று ஆவணங்களே அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்று ஆவணங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆவணங்களை மாற்றத் தவறியவர்கள், காவல் நிலைய அறிக்கையின் நகல் இல்லாமல் எந்த ஜேபிஜே சேவை மையத்திற்கும் சென்று, பெயர், அடையாள அட்டை எண், முகவரியை வழங்கி இலவசமாக மாற்று ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இந்த விவரங்களை அறிந்திருந்தாலும், இன்னும் ஆவணங்களைப் பெறாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் ஜேபிஜே சேவை மையங்களை அணுகலாம் என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS