தொழிலாளர்களுக்கான அனைத்து சேவைகள் மையம்

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.13-

தொழிலாளர்களுக்கான அனைத்து சேவைகள் மையத்தை உருவாக்குவது தொழிலாளர் தொடர்பான எந்தவொரு பிரச்சினைகளையும் எளிதாக நிர்வகிப்பதற்கான முயற்சியாகும். இந்த மையம் அனைத்து தொழிலாளர் சேவைகளையும் ஒன்றிணைத்து, முதலாளி – தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருக்கும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். நாட்டின் தொழிலாளர் நலனைப் பாதுகாக்க ஒரே குடையின் கீழ் அனைத்து தொழிலாளர் சேவை மையத்தை நிறுவுவதற்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன் என்றார்.

இதன் மூலம் தொழிலாளர்கள், முதலாளிகள், மனிதவள மேலாளர்கள் ஆகியோர் பயனடைவார்கள். நாட்டில் தொழிலாளர் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் நேரடியாக இந்த மையத்தை அணுகலாம். பினாங்கு டிஏபியின் ஈகைத் திருநாள் பொது விருந்தோம்பல் விழாவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், மாநில அரசுடன் இணைந்து இந்த முயற்சியைத் தொடங்கும் முதல் மாநிலமாக பினாங்கு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மையம் நாடு முழுவதும் நிறுவப்படும். ஆனால் இந்த முன்னோடித் திட்டம் பினாங்கில் தொடங்கப்படும். இது தொடர்பாக மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS