கோலாலம்பூர், ஏப்ரல்.13
மலேசியாவின் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசி ராஜா ஸாரித் சோபிஃயாவும் நாட்டில் உள்ள அனைத்து சீக்கிய, இந்திய சமூகத்தினருக்கும் வைசாகி தின வாழ்த்துகளையும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அனைவருக்கும் அதிக மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தர வேண்டும் என்று அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.
மத – இன வேறுபாடுகள் இன்றி மக்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையே நாட்டின் வளமைக்கு அடித்தளம் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் கொண்டு வரட்டும் என்று அவர் வாழ்த்தினார்.