கெஅடிலான் கட்சி தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிடவில்லை

கோலாலம்பூர், ஏப்ரல்.14-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சி உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணத்தை அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கைவிட்டார்.

மாறாக, கட்சியின் மத்திய செயற்குழுவிற்குப் போட்டியிடப் போவதாக டத்தோ பாஃமி அறிவித்துள்ளார்.

அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தல் வருவதை முன்னிட்டு கெஅடிலான் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரா, ஆயர் கூனிங் தேசிய தகவல் பிரச்சார மையத்தில் சமூகத்துடன் ஒரு நாள் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் டத்தோ பாஃமி இதனைத் தெரிவித்தார்.

தாம் மத்தியச் செயலவைக்குப் போட்டியிடுவது மூலம் மத்தியச் செயலவை அளவில் கட்சிப் பணிகளைச் சீரமைக்க பெரிதும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS