கோலாலம்பூர், ஏப்ரல்.14-
கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவராக டத்தோ முகமட் உசுஃப் ஜான் முகமட் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பகாங் மாநில போலீஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ அஸ்ரி அக்மார் அயோப்பிற்கு பதிலாக அப்பதவிக்கு முகமட் உசுஃப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, முகமட் உசுஃப், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சட்டப் பிரிவின் துணை இயக்குநராகப் பதவி வகித்து வந்துள்ளார்.