அந்தக் கொள்ளையனுக்கு 10 குற்றப்பதிவுகள் உள்ளன

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.14-

கடந்த வாரம்,தாய்லாந்து Hat Yai- யில் ( ஹட்ஜாய் ), நகைக்கடை ஒன்றில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகளைக் கொள்ளையடித்த மலேசியப் பிரஜைக்கு ஏற்கனவே பத்து குற்றப்பதிவுகள் உள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

அந்த மலேசியப் பிரஜை அன்றைய தினமே பேங்காக் அருகில் உள்ள நொந்தாபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட போதிலும், மலேசியாவில் புரிந்த குற்றச் செயல்களுக்காக அந்த நபரை, நாட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, தாய்லாந்தில் புரிந்த குற்றச் செயலுக்காக அந்த நபர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை, அந்த நாட்டு போலீசாரிடமே விட்டு விடுவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

62 வயதுடைய அந்த நபர் இரண்டு குற்றச் செயல்களுக்காக 1969 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக 302 பிரிவின் கீழ் மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார் என்று டான் ஶ்ரீ ரஸாருடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS