எஸ்டிஆர்49 படத்தில் இணைந்த சாய் அபியங்கர்

சிம்பு நடிக்க இருக்கும் 49ஆவது படத்தின் இசையமைப்பாளரை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதோடு அப்படத்தின் இசைப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். சிம்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் சிம்புவின் பிறந்தநாள் தினத்தில், அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, சிம்புவின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவிருப்பதாகவும், 49வது படத்தை ’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருப்பதாகவும், சிம்புவின் 50வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமது 49வது படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் என சிம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சாய் அபியங்கர், சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அது மட்டுமன்றி, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம், அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களுக்கும் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

WATCH OUR LATEST NEWS