இப்பருவத்திற்கான ஈபிஎல் பட்டத்தை வெல்லும் நிலையை நெருங்கி வருகிறது லிவர்பூல்

இங்கிலாந்து, ஏப்ரல்.14-

இப்பருவத்திற்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளர் பட்டத்தை நெருங்கி வருகிறது லிவர்பூல். ஆகக் கடைசியாக அது வெஸ்ட் ஹாம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.  லிவர்பூல் நட்சத்திரம் முகமட் சாலா  ஒரு பருவத்தில் கோலடிக்க அதிகம் உதவியவர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். 

லிவர்பூலுக்கான முதல் கோலை லுயிஸ் டயஸ் அடித்தார். அதன் வெற்றி கோலை கேப்டன் வான் டிஜ்க் போட்டார். புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் 76 மொத்தப் புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தை ஆக்கிரமித்து வருகிறது. 

இன்னும் ஆறு ஆட்டங்களே எஞ்சியுள்ள் நிலையில், பட்டத்தை வெல்ல லிவர்பூலுக்கு இன்னும் தேவைப்படுவது இரண்டு வெற்றிகள் மட்டுமே. இரண்டாம் இடத்தில் உள்ள ஆர்செனல் 63 புள்ளிகளைக் கொண்டுள்ளது. 
 

WATCH OUR LATEST NEWS