அயோத்தி ராமர் கோவிலுக்கு மின்னஞ்சலில் மிரட்டல்

அயோத்தி, ஏப்ரல்.14-

அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அறக்கட்டளைக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்ததாக அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது, தமிழகத்தில் இருந்து ஒருவர் இதை அனுப்பி உள்ளார். அது என்ன வகையான மிரட்டல் என்பதை கூற முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ராமர் கோவிலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் எந்த வகையிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

WATCH OUR LATEST NEWS