பெட்ரோல் குண்டுத் தாக்குதல் : அவசர நடவடிக்கை தேவை

கோலாலம்பூர், ஏப்ரல்.14-

கோலாலம்பூர், கெப்போங் பாருவில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வட்டி முதலைக்கு வேலை செய்தவர் என்று நம்பப்படும் உள்ளூர்வாசியினால் இந்த பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று லிம் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலை நடத்தியவர், இந்தச் செயலைப் பதிவு செய்து, அந்த காணொளியைப் பாதிக்கப்பட்டவருக்கு அனுப்பி, கடனைத் தீர்க்கத் தவறினால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்து இருப்பதாக லிம் தெரிவித்தார்.

எட்டு வினாடிகள் கொண்ட காணொளியில், தாக்குதல் நடத்தியவர், அந்த வீட்டின் முன் வாயிலில் ஒரு குறிப்பை விட்டு சென்றுள்ளார் என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS