மூன்று பெண்கள் உட்பட அறுவருக்குத் தடுப்புக் காவல்

சிரம்பான், ஏப்ரல்.14-

சிரம்பானில் பிணைப் பணம் கோரி 16 வயது ஓர் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் 21 வயது இந்திய இளைஞர் என்று நம்பப்படும் ஓர் ஆடவர் கிள்ளான், புக்கிட் திங்கியில் இன்று காலையில் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மூன்று பெண்கள் உட்பட அறுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த அறுவரையும் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

இந்த அறுவரும் போலீஸ் வேன் மூலம் மாலை 5.20 மணிக்கு சிரம்பான் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

20 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்தப் பெண்கள், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மாட் ஸாபிஃபிர் முகமட் யூசோஃப் தெரிவித்தார்.

எனினும் இந்த கடத்தல் சம்பவத்தை புக்கிட் அமான் போலீசார் நேரடியாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டதால் இது குறித்து மேலும் கருத்துரைக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட 16 வயது பெண்ணைக் கடத்திச் சென்று 20 லட்சம் ரிங்கிட் வரையில் இவர்கள் பிணைப் பணம் கோரியதாக நம்ப்படுகிறது.

எனினும் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை 2 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளை ஒப்படைத்தப் பின்னாப்ர் அந்த பெண் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சிரம்பானில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS