ஷா ஆலாம், ஏப்ரல்.14-
சீன அதிபர் ஸி ஜின்பிங், நாளை செவ்வாய்க்கிழமை மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார். சீன அதிபரின் வருகையை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் பல சாலைகள் மூடப்படவிருக்கின்றன.
இதனை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் போக்குவரத்துப் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆலோசனை கூறியுள்ளார்.
சீன அதிபரின் போக்குவரத்து பயணம் சமூகமாக நடைபெறவும், அசெகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் பொது மக்கள் மாற்றுச் சாலைகளை பயன்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாக அவரின் பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா தெரிவித்தார்.