கோலாலம்பூர், ஏப்ரல்.14-
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் மறைவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
துன் அப்துல்லா ஒரு தலைவர் மட்டும் அல்ல, மலேசியாவின் சக்திமிகுந்த அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய பெரிய மனம் படைத்த ஒரு மாமனிதர் என்று அன்வார் புகழஞ்சலி சூட்டினார்.
பல்வேறு சவால்களும், மோசமானச் சூழலும் கொண்ட அரசியலில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் மிக அமைதியாக அதே வேளையில் ஒரு சக்தி மிகுந்த தலைவராக விளங்கியவர்.
பாக் லாவின் குணாதிசயங்களில் ஒரு சிறந்த அரசியல்வாதியாகக் காண முடிந்தது. அவரின் ஆன்மா மிக உயர்வானது. நாட்டிற்காக, மக்களுக்கான அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூரப்படும் என்று தமது இரங்கல் செய்தியில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.